பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்யலாம்
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர்களை விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பயிர்களுக்கு அரசு சார்பில் மானியம் அளிக்கப்படுகிறது. மேலும் விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்ய மத்திய அரசு பிரதமரின் காப்பீட்டு திட்டம் என்று திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காரீப் 2018 பருவப் பயிர்களுக்கான பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல் பயிர்களை காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும். இதர விவசாயப் பயிர்களுக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந் தேதி, தோட்டக்கலைப் பயிர்களுக்கு அக்டோபர் மாதம் 1-ந் தேதி என காப்பீடு செய்வதற்கு நாள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கர் நெல்லுக்கான பிரிமியத்தொகை ரூ.580, மக்காச்சோளத்திற்கு ரூ.464, ராகி ரூ.242, சோளத்திற்கு ரூ.266, பயறு வகை பயிர்கள் ரூ.286, பருத்தி ரூ.607, நிலக்கடலை ரூ.467, வெங்காயம் ரூ.1,595, வாழை ரூ.1,783, மரவள்ளி ரூ.1,292, மஞ்சள் ரூ.2 ஆயிரத்து 963 எனவு பிரிமியத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டார மேலாண்மை விரிவாக்க மையத்தை அணுக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story