கிறிஸ்தவ ஆலயங்களை சீரமைக்க நிதி உதவி கலெக்டர் தகவல்
கிறிஸ்தவ ஆலயங்களை சீரமைக்க நிதி உதவி கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
தேனி,
இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ ஆலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிக்கள் மேற்கொள்வதற்கு நடப்பாண்டில் நிதிஉதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவி பெறுவதற்கு கிறிஸ்தவ ஆலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி வர வேண்டும். ஆலயமும், ஆலயம் கட்டப்பட்ட இடமும் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.
ஆலயத்தில் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சீரமைப்பு பணிக்காக ஒருமுறை நிதி உதவி அளிக்கப்பட்ட ஆலயத்துக்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்ப படிவத்தை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினர் உரிய ஆவணங்களுடன் பரிசீலனை செய்வார்கள். பின்னர் கிறிஸ்தவ ஆலயங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படும்.
கட்டிடத்தின் வரைபடம், திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி 2 தவணைகளாக ஆலயங்களின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story