மூதாட்டி வீட்டில் 25 பவுன் நகைகள் திருட்டு


மூதாட்டி வீட்டில் 25 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 28 July 2018 3:30 AM IST (Updated: 28 July 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

தாண்டிக்குடி அருகே மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 25 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

பெரும்பாறை,


தாண்டிக்குடி அருகே பண்ணைக்காட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பின் புறம் உள்ள தெருவை சேர்ந்தவர் வீரலட்சுமி (வயது 72). இவர் வீட்டை பூட்டி விட்டு மதுரையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். இந்தநிலையில் அருகே வசிப்பவர்கள் வீரலட்சுமி வீட்டின் பின்புற கதவு திறந்து கிடப்பதாக வரலட்சுமிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வீரலட்சுமி பண்ணைக்காடுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள் திருடு போய் இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வீரலட்சுமி தாண்டிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story