கடலூர் விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி திடீர் ஆய்வு
கடலூர் விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி திடீரென ஆய்வு செய்தார்.
கடலூர்,
கடலூர் செம்மண்டலத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் கீழ் மாவட்ட விதை பரிசோதனை நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தை நேற்று காஞ்சீபுரம் விதை பரிசோதனை அதிகாரி ஜோசப் ஹெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக திடீரென வருகை தந்தார்.
பின்னர் அவர் பரிசோதனை நிலையத்துக்கு, ஆய்வுக்கு வரும் பல்வேறு நிலை விதை மாதிரிகளான சான்று விதை மாதிரிகள், ஆய்வாளர் விதை மாதிரிகள் மற்றும் பணி விதை மாதிரிகள் ஆகியவை தொழில்நுட்ப முறையில் விதைச்சட்டம் 1966-ன்படி ஆய்வு செய்யப்படுகிறதா? ஆய்வக உபகரணங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார்.
மேலும் உரிய காலக்கெடுவில் பகுப்பாய்வு முடிவுகள் அனுப்பப்படுகிறதா? ஆய்வக பதிவேடுகள் அனைத்தும் சரியான முறையில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்தும் மற்றும் காப்பு விதை மாதிரிகள் தொழில்நுட்ப முறையில் சேகரிக்கப்பட்டு குறித்த காலக்கெடுவில் அப்புறப்படுத்தப்படுகிறதா? என்பதை மேலாய்வு செய்து வேளாண்மை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இது தவிர விதை முளைப்பு அறையில் விதை மாதிரிகளின் முளைப்புத்திறன் கணக்கெடுப்பு பரிசோதனை மற்றும் விதை காப்பு அறையில் உரிய தட்ப வெப்ப நிலை பராமரிக்கப்படுகிறதா? என்பதையும் விதை பரிசோதனை அதிகாரி ஜோசப் ஹெக்டர் ஆய்வு செய்தார். சம்பா பருவத்தின் அவசரம் கருதி முன்னுரிமை அடிப்படையில் முடிவுகள் கோரப்படும் விதை மாதிரிகளுக்கு அதன் முடிவுகளை உடனுக்குடன் உரிய நபர்களுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். ஆய்வின் போது கடலூர் ஆய்வக வேளாண்மை அலுவலர் ஞானசேகர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story