காதல்திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்,
தஞ்சை அருளானந்த நகரை சேர்ந்தவர் அருள்மெய்யன். ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி வித்யா (வயது25). இவர்கள் 2 பேரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் வித்யா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனமுடைந்த நிலையில் இருந்த வித்யா பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். தீயின் கொடுமை தாங்காத அவர் அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வித்யாவை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தஞ்சை தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் வித்யாவுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆவதால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து தஞ்சை ஆர்.டி.ஓ. சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story