சொத்துவரி உயர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சொத்துவரி உயர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 July 2018 4:45 AM IST (Updated: 28 July 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கோவை,

தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்றுக்காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:- எடப்பாடி பழனிசாமி தலைமையிலான செயலற்று கிடக்கிற தமிழக அரசு ஏழை-எளிய மக்கள் பாதிக்கிற வகையில் சொத்து வரியை உயர்த்தியுள்ளது. பல எதிர்ப்புகளுக்கு பிறகு சொத்து வரி உயர்வு 100 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. சொத்து வரி உயர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story