சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
திருவாரூர்,
தமிழக அரசு, சொத்து வரியை 100 சதவீதம் உயர்த்தியது. இதற்கு அனைத்து தரப்பினரிடையே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரியை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சொத்து வரியை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தார். அதன்படி நேற்று திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார். இதில் அவைத்தலைவர் சோமசுந்தரம், செயற்குழு உறுப்பினர் தியாகபாரி, விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைச்செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர்கள் அன்பரசன், பாலச்சந்திரன், சேகர் கலியபெருமாள், ஜோதிராமன், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் தேவா நன்றி கூறினார்.
அப்போது வரி உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும், வரி உயர்வை ரத்து செய்ய கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திருத்துறைப்பூண்டி, மன்னார்குடியில் சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதே போல திருத்துறைப்பூண்டி நகராட்சி முன்பு தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ் (திருத்துறைப்பூண்டி), பாலஞானவேல் (கோட்டூர்), மனோகரன் (முத்துப்பேட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக அரசு உடனடியாக கூடுதல் வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் கார்த்தி, ராமகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் முகில்ராஜேந்திரன், அன்பரசு, சிக்கந்தர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, நகர இளைஞரணி அமைப்பாளர் வசந்த, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், ராஜமாணிக்கம், முன்னாள் எம்.பி. விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு கண்டித்தும், உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் பாலு, வர்த்தக சங்க மாநில துணைத்தலைவர் ஞானசேகரன், மாநில மாணவரணி துணை செயலாளர் சோழராஜன், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ், முன்னாள் நகரசபை தலைவர் கார்த்திகா உத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story