மோப்ப நாய்களுக்கு, பயிற்சி அளித்த போலீஸ்காரர்களுக்கு கமிஷனர் பாராட்டு
துப்பறியும் போட்டியில் தங்கப்பதக்கம்: மோப்ப நாய்களுக்கு, பயிற்சி அளித்த போலீஸ்காரர்களுக்கு கமிஷனர் பாராட்டினார்.
சென்னை,
சென்னை வண்டலூர் மற்றும் ஆவடியில் 62–வது மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் கடந்த 22–ந்தேதி முதல் 27–ந்தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை காவல்துறையில் பணியாற்றும் 6 துப்பறியும் நாய்கள் உள்பட தமிழக காவல்துறையில் பணியாற்றும் 51 துப்பறியும் மோப்ப நாய்கள் கலந்துகொண்டன.
குற்றம் கண்டுபிடித்தல், வெடிகுண்டு கண்டுபிடித்தல், போதைப் பொருள் கண்டுபிடித்தல் ஆகிய 3 பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சென்னை பெருநகர துப்பறியும் மோப்பநாய் படையின் டாபர்மேன் இனத்தை சேர்ந்த அக்னி என்ற 8 வயது ஆண் துப்பறியும் நாய் போதை பொருள் கண்டுபிடித்தல் போட்டியில் முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கத்தையும், ஜான்சி என்ற 4 வயது பெண் துப்பறியும் நாய் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றது.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்துக்கான தங்கம் மற்றும் வெள்ளி கேடயமும் சென்னை மோப்ப நாய் பிரிவுக்கு கிடைத்தது. இந்த நாய்களுக்கு பயிற்சி அளித்த ஜெ.ஆப்ரஹாம், சி.வினோதன் உள்பட போலீஸ்காரர்களை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். அப்போது போட்டியில் சாதித்த மோப்பநாய்களும் உடன் இருந்தது.

Related Tags :
Next Story