பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி
பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் பாராளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது குறித்து மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் துறைமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் துரை தலைமை தாங்கினார். இணை செயலாளர் ராணி வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., முன்னாள் துணைசபாநாயகர் அருணாசலம் ஆகியோர் பேசினர். இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-
தமிழகம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை, யாராலும் அசைக்க முடியாது, எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க. தொடங்கப்பட்ட போது 17 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். பின்னர் ஜெயலலிதா தலைமையில் ஒரு கோடியே 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தனர். தொண்டர்கள் தான் நமது இயக்கத்தின் பலம். கடைக்கோடி தொண்டனும் அமைச்சர்களாக, மாவட்ட செயலாளராக பதவிக்கு முடிகிற ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். பல தேர்தல்களில் நாம் கூட்டணி அமைத்து வெற்றிப்பெற்றுள்ளோம். ஆனால் ஜெயலலிதா எடுத்த முடிவின் படி கடந்த 2014- பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 40 இடங்களில் 37 இடங்களை பெற்றோம்.
இதேபோல் கடந்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 134 இடங்களை பெற்றோம். 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மிகசொற்ப ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது. கிராமங்கள் தோறும் 20 பேர் கொண்ட பூத் கமிட்டியும், 50 வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதியையும் நியமிக்க வேண்டும். வரும் எம்.பி. தேர்தலில் வியூகம் வகுத்து சிறப்பாக செயல்பட்டு அ.தி.மு.க. வெற்றிபெற அனைவரும் முழுமையாக பாடுபட வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும். தமிழகத்தில் ஆயிரம் ரஜினி, கமல், தினகரன் வந்தாலும் அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவோ, அழிக்கவோ முடியாது. ஜெயலலிதா எண்ணத்தை ஈடேற்றும் வகையில் நீங்கள் எல்லாரும் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாநில மீனவர் பிரிவு இணைச்செயலாளர் தேவராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராசாராம், மாவட்ட பொருளாளர் பூவை செழியன், மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், புதுவேட்டக்குடி கிருஷ்ணசாமி, சுரேஷ், நகர செயலாளர் ராஜபூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் லட்சுமி நன்றி கூறினார். முன்னதாக குன்னத்தில் வைத்திலிங்கம் எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூட்டத்தை தொடர்ந்து வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக மாநிலத்தின் நில அமைப்பில் காவிரி உபரி நீரை தேக்கி வைக்க முடியாது. அதனால் அவர்கள் நிபுணர்களை கேட்டப்போது உபரிநீரை தேக்கி வைக்கமுடியாது என்றும் ஏரி, குளம், குட்டைகளில் மட்டுமே நீரை தேக்கிவைக்கமுடியும் என்றும் கூறிவிட்டதால் தான் நமக்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கிறது. இந்த விஷயத்தில் திருப்பதி ஏழுமலையான் கர்நாடக முதல் மந்திரி குமாரசாமிக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story