ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.42 கோடியில் பணிகள்
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.42 கோடியே 20 லட்சம் செலவில் குடிநீர் திட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24 ஆயிரத்து 864 பேர் வசித்து வருகின்றனர். பேரூராட்சியில் சாலைகள், 62.18 கி.மீட்டர் அளவுக்கும், வடிகால்வசதி 44.41 கி.மீட்டர் அளவுக்கும் உள்ளன.
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 287 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த திட்ட பணிகள் மூலம் 287 குடும்பத்தை சேர்ந்த சுமார் 1200 பேர் பயன் பெறுவார்கள்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை வசதி இல்லாத வீடுகளுக்கு 464 தனி நபர் கழிவறைகள், ரூ.37 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பீட்டில், கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நகர்புற உள்ளாட்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இந்த பேரூராட்சியில் ரூ.4 கோடியே 44 லட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணி செய்து முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம், குடிநீர் திட்டப்பணி ரூ.42 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டிலும், பாதாளசாக்கடை திட்டப்பணி ரூ.77 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டிலும் நடந்து வருகிறது.
ராஜீவ்காந்தி நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியில் நீரேற்று அறை தளம் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கான்கீரிட் தூண்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.
பிருந்தாவன் நகரில் 5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி நடைபெறுகிறது.
ஏ.எல்.எஸ் நகரில் 3 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியில் நீரேற்று அறை தளம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி முடிவடைந்து மூடி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
டி.கே.நாயுடு நகரில் 5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியில் கம்பி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ராஜீவ்காந்தி நகரில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு மற்றும் ஏ.எல்.எஸ் நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா உடன் இருந்தார்.

Related Tags :
Next Story