திருமணிக்குப்பம், நாலூர் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்


திருமணிக்குப்பம், நாலூர் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 29 July 2018 4:15 AM IST (Updated: 29 July 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் திருமணிக்குப்பம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

திருவள்ளூர்,

தனி தாசில்தார்கள் பரணிதரன், வெங்கடேஷ், செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் திருமணிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு, சாதிசான்றிதழ், ரேஷன்கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் அங்கேயே ஆய்வு செய்து 5 பெண்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

மீஞ்சூரை அடுத்த நாலூர் ஊராட்சியில் அடங்கிய அக்ரம்பேடு கிராமத்தில் தமிழக அரசின் வருவாய்த்துறை சார்பில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பொன்னேரி தாசில்தார் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் சியாமளாதேவி முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். இந்த முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் சகாயநிர்மலா, சஞ்சீவிபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவிற்கு உட்பட்ட கிதிரிப்பேட்டை ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் தாசில்தார் கிரி ராணி, முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் கணேசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் என்.எம். வரதராஜுலு ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர் மேலும் தமிழக அரசின் சார்பில் கிராம மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து கிராம மக்களுக்கு விளக்கி கூறினார்கள் முகாமில் முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல் பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிக்கான மனுக்களை கிராம மக்களிடம் இருந்து வருவாய்த்துறை அதிகாரிகள் பெற்றனர்.

அம்மா திட்ட முகாமில் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அக்ரி நாகராஜன், என்.ஆர்.பழனி, ஜி.பிரபாகர், வாலாஜாபாத் தனி தாசில்தார் ஜெயசித்ரா, வருவாய் ஆய்வாளர் சங்கீதா, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த எகுமதுரை ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் காமராஜர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் முதியோர் உதவித்தொகை தொடர்பாக 2 மனுக்களும், விதவை உதவித்தொகை தொடர்பாக 2 மனுக்களும், இலவச வீட்டுமனை பட்டா கோரி 27 மனுக்களும், இதர மனுக்கள் 3 உள்பட மொத்தம் 34 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 4 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிக்கான சான்றிதழ்களை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செந்தில்நாதன் வழங்கினார். முன்னதாக ஊராட்சி செயலாளர் ஷோபன் பாபு வரவேற்றார். முடிவில் மகேஷ் நன்றி கூறினார்.

Next Story