தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம்


தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 29 July 2018 4:00 AM IST (Updated: 29 July 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மருத்துவமனை டாக்டர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமரைக்குளம்,

தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே இந்திய மருத்துவ சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனை டாக்டர்கள் 12 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளது. இதில் பணியாற்றி வரும் 250-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணிக்கு செல்லாமல் 12 மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சில கதவுகள் திறக்கப்படாமல் அடைக்கப்பட்டிருந்தது. மாலை 6 மணிக்கு பிறகு டாக்டர்கள் வழக்கம் போல் தங்களது பணிகளில் ஈடுபட்டனர். 

Next Story