உலக மக்கள்தொகை நாள் விழிப்புணர்வு ஊர்வலம் புதுக்கோட்டையில் நடந்தது


உலக மக்கள்தொகை நாள் விழிப்புணர்வு ஊர்வலம் புதுக்கோட்டையில் நடந்தது
x
தினத்தந்தி 29 July 2018 4:00 AM IST (Updated: 29 July 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் உலக மக்கள்தொகை நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட குடும்பநல அமைப்பு சார்பில் உலக மக்கள்தொகை நாள் விழிப்புணர்வு ஊர்வலம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ், தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தரேஸ்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஊர்வலம் பொது அலுவலக வளாகத்தில் தொடங்கி எம்.ஜி.ஆர். சிலை, அண்ணா சிலை, கீழராஜ வீதி, பிருந்தாவனம் கார்னர் வழியாக டவுன்ஹாலில் நிறைவுபெற்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிறு குடும்பம் சிங்கார தோட்டம், ஒன்றுபெற்றால் ஓவியம், திட்டமிட்ட குடும்பம் தெவிட்டாத இல்லம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். இதில் ஆறுமுகம் எம்.எல்.ஏ., ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சந்திரசேகர், குடும்பநல துணை இயக்குனர் மலர்விழி, புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் கலைவாணி, பரணிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story