வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும் அமைச்சர் பி.தங்கமணி பேச்சு
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும் என்று அரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.
அரூர்,
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் அரூரில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட வக்கீல் பிரிவு துணைத்தலைவர் .பசுபதி வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட துணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், ராஜேந்திரன், கோவிந்தசாமி மற்றும் ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான பி.தங்கமணி, கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வைகைசெல்வன், கட்சியின் அமைப்பு செயலாளர் என்.முருகுமாறன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனைகளையும், அ.தி.மு.க. அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினார்கள்.
கூட்டத்தில் அமைச்சர் பி.தங்கமணி பேசுகையில், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவிலேயே தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அளவிற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அ.தி.மு.க.வையும், இந்த அரசையும் அழிக்க நினைத்தவர்கள் நிச்சயம் அழிந்து போவார்கள். கட்சியை அழிக்க நினைத்த 18 எம்.எல்.ஏ.க்கள் தற்போது நடுக்கடலில் தத்தளித்து கொண்டு இருக்கிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழி நடத்தி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர். சேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்வதன் மூலம் இந்த பகுதி வளர்ச்சி அடையும் என்று கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிங்காரம், ஆறுமுகம், குப்புசாமி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், வேலுமணி, பெரியண்ணன், கோபால், முன்னாள் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரங்கநாதன், நகர செயலாளர் குருநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ஒன்றிய செயலாளர் மதியழகன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story