ஆழ்துளை கிணறுகள் அமைத்ததில் முறைகேடு புகார் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
கொங்குபட்டி ஊராட்சியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்ததில் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்சஒழிப்பு போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
ஓமலூர்,
காடையாம்பட்டி ஒன்றியம் கொங்குபட்டி ஊராட்சியில் நல்லூர் பிரிவு, பெரியார்கவுண்டனூர் காட்டு வளவு, நல்லூர் காலனி, மயானம், மோட்டூர் காட்டுவளவு, ஒத்த புளியானூர், மூங்கிலேரி, விசாரெட்டியூர் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 8 ஆழ்துளை கிணறுகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டன.
இந்த ஆழ்துளை கிணறுகளில் குறிப்பிட்ட அளவில் இரும்பு குழாய் அமைக்கப்படவில்லை என்றும், மின் மோட்டார் பொருத்தியதில் ஊழல் நடந்துள்ளது என்றும் புகார் கூறப்பட்டது. மேலும் இதில் முறைகேடு நடந்துள்ளதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் முறைகேடு நடந்ததாக கூறப்படும் 8 ஆழ்துளை கிணறுகளையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், அப்பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது ஆழ்துளை கிணறுகளில் உள்ள மின் மோட்டார் இரும்பு குழாயை மேலே தூக்கி ஆய்வு செய்தனர்.
மேலும் அவர்கள் ஊராட்சி பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளப்படி உள்ள அளவுக்கு இந்த இரும்பு குழாய் அமைக்கப்பட்டுள்ளதா?, கம்பெனி மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story