எல்லா பிரச்சினையிலும் அரசியல் செய்கிறார்: கவர்னருக்கு அதிகார போதை தலைக்கேறி விட்டது - நாராயணசாமி ஆவேசம்
எல்லா பிரச்சினையிலும் அரசியல் செய்வதால் கவர்னருக்கு அதிகார போதை தலைக்கேறி விட்டது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
காரைக்கால்,
காரைக்கால் திருநள்ளாறு சாலையில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், புதுச்சேரி வேளாண்மைத்துறை சார்பில் ரூ.50 லட்சத்தில் புதிதாக விவசாயிகள் ஓய்வு இல்லம் (விடுதி) கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். காரைக்கால் தெற்கு தொகுதி அசனா எம்.எல்.ஏ, புதுச்சேரி அபிவிருத்தி ஆணையர் அன்பரசு, மாவட்ட கலெக்டர் கேசவன், கூடுதல் வேளாண் இயக்குனர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓய்வு இல்லத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைவதில் புதுச்சேரி அரசு உறுதியாக இருந்தது. இதற்காக பலமுறை நானும், அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் டெல்லி சென்று வந்தோம். மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட போது, பல விஷயங்கள் புதுச்சேரிக்கு சாதகமாக இருந்தது.
குறுவை சாகுபடி செய்ய கர்நாடகம்,. தமிழகத்திற்கு அதிகாரம் இல்லை. புதுச்சேரிக்கு மட்டுமே உள்ளது என கூறப்பட்டது. அதேபோல், எந்தெந்த மாதத்தில் எவ்வளவு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்கும் முழு அதிகாரத்தையும் மேலாண்மை வாரியத்திற்கே வழங்கவேண்டும் என வலியுறுத்தினோம்.
முக்கியமாக, காரைக்காலில் விவசாயத்திற்கு போக மீதமுள்ள நீரை, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் சேமித்து வைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.1,050 கோடி மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.
காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதி கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது, வறட்சி நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தினோம். ஆனால் வறட்சி நிவாரணம் தரப்படவில்லை. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவும் மத்திய அரசு மறுத்துவிட்டது. புதுச்சேரியின் அதிகாரத்திற்கு உட்பட்டு விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்தோம்.
தற்போது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என போராடி வருகிறோம். அதுவும், புதுச்சேரி, மாகி, ஏனாம், காரைக்கால் உள்ளிட்ட 4 பிராந்தியங்களை இணைத்த மாநில அந்தஸ்தைதான் வலியுறுத்தி வருகிறோம். அது முடியாது என அதற்கும் கவர்னர் முட்டுக்கட்டையாக வந்து நிற்கிறார். அதிகார போதை தலைக்கேறிவிட்டது என நினைக்கிறேன். அனைத்திலும் அரசியல் செய்வதை விட, பதவியை ராஜினமா செய்துவிட்டு அரசியலில் இறங்குமாறும் கூறிவிட்டேன். 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரிக்கு ஏன் மாநில அந்தஸ்து தரக்கூடாது. இதற்கெல்லாம் விடிவு காலம் விரைவில் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, காரைக்காலில் புதிதாக கட்டப்படும் நேரு மார்க்கெட், கடற்கரை தங்கும் விடுதி, கோர்ட்டு வளாகம் பணியை முதல் அமைச்சர் ஆய்வு செய்தார்.

Related Tags :
Next Story