திருப்பத்தூரில் ஆற்று கால்வாய்க்குள் கார் பாய்ந்து முதியவர் பலி


திருப்பத்தூரில் ஆற்று கால்வாய்க்குள் கார் பாய்ந்து முதியவர் பலி
x
தினத்தந்தி 30 July 2018 3:30 AM IST (Updated: 30 July 2018 12:00 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே ஆற்று கால்வாய்க்குள் கார் பாய்ந்து முதியவர் பலியானார்.

திருப்பத்தூர்,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசர்குலம் பகுதியை சேர்ந்த தப்ளிக் ஜமாத் கமிட்டியினர் திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காரில் சென்றனர். பின்னர் அங்கிருந்து திருப்பத்தூர் வழியாக அறந்தாங்கி நோக்கி அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

 நேற்று மாலை திருப்பத்தூர் அருகில் சிங்கம்புணரி சாலையில் அவர்கள் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த பாலாற்று கால்வாய்க்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் காரில் சென்ற அறத்தாங்கியை சேர்ந்த ஹாஜிசுல்தான்(வயது 70) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.

 மேலும் காரில் சென்ற முகமது அலி(54), பீர்முகமது(71), அப்துல்ஜபார்(51), டிரைவர் ஷேக் அப்துல்லா(47) ஆகியோர் பலத்த காயங்களுடன் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story