கோவில் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு


கோவில் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 30 July 2018 3:15 AM IST (Updated: 30 July 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை அருகே அங்காளம்மன் கோவில் பூட்டை உடைத்து 3 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுப்பேட்டை,


புதுப்பேட்டை அருகே உள்ள சிறுவத்தூரில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக அதே கிராமத்தை சேர்ந்த நேரு உள்ளார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும், பூசாரி நேரு கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை 5 மணியளவில் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு நேரு வந்தார். அப்போது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும உள்ளே சென்ற பார்த்தபோது மூலவரான அங்காளம்மன் கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி சங்கிலியை காணவில்லை. நள்ளிரவில் மர்மநபர்கள் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அம்மன் கழுத்தில் கிடந்த நகையை பறித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து கோவில் நிர்வாகி ஜெய்சங்கர் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story