புதுச்சேரி ரெயின்போ நகர் தூய ஜான்மரி வியான்னி ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
புதுச்சேரி தூய ஜான்மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம் நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
புதுச்சேரி,
புதுச்சேரி ரெயின்போ நகர் தூய ஜான்மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம் நேற்று தொடங்கியது. அதையொட்டி காலை 7 மணிக்கு திருப்பலி நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை தோமினிக் ரொசாரியோ மற்றும் பங்கு பேரவை குழுவினர் பலர் கலந்துகொண்டனர். இரவு சிறிய தேர்பவனியும் நடந்தது.
விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 4–ந் தேதி வரை தினமும் காலை மற்றும் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியும், சிறிய தேர்பவனியும் நடைபெறுகிறது. வருகிற 5–ந் தேதி காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும், நற்கருணை ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் புதுவை–கடலூர் உயர்மறை மாநில பேராயர் ஆனந்தராயர் கலந்துகொள்கிறார்.
Related Tags :
Next Story