கிருஷ்ணகிரி அருகே பரிதாபம் பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
கிருஷ்ணகிரி அருகே பஸ் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி பலியானார்.
கிருஷ்ணகிரி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆலூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் காந்தி (வயது 45). இவர் பெங்களூருவில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.
அந்த பஸ் கிருஷ்ணகிரி அருகே திப்பனப்பள்ளி ஏரி பக்கமாக வந்த போது பஸ்சில் இருந்த காந்தி திடீரென்று படிக்கட்டு வழியாக கீழே குதித்தார். அந்த நேரம் பின்னால் வந்து கொண்டிருந்த கர்நாடக மாநில அரசு பஸ் காந்தி மீது மோதியது. இதில் காந்தி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான காந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story