கணவர் மது குடித்து விட்டு தகராறு: தூக்குப்போட்டு பெண் தற்கொலை


கணவர் மது குடித்து விட்டு தகராறு: தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 30 July 2018 3:31 AM IST (Updated: 30 July 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

கணவர் மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டதால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த மீனவர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி சரண்யா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 2 வயது மகன் உள்ளார்.

சிலம்பரசன் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் மனமுடைந்த சரண்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story