லாரியில் மணல் கடத்த முயன்ற டிரைவர் கைது


லாரியில் மணல் கடத்த முயன்ற டிரைவர் கைது
x
தினத்தந்தி 31 July 2018 3:00 AM IST (Updated: 30 July 2018 6:35 PM IST)
t-max-icont-min-icon

வளவனூர் அருகே லாரியில் மணல் கடத்த முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

வளவனூர், 

வளவனூர் அருகே ஏ.கே.குச்சிப்பாளையம் கிராமத்தில் சிலர் மாட்டு வண்டிகள் மூலம் தென்பெண்ணையாற்றில் இருந்து மணலை எடுத்து வந்து ஒரு காலிமனையில் கொட்டி, அதனை லாரிகள் மூலம் வெளியூர்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்வதாக வளவனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வளவனூர் போலீசார் ஏ.கே.குச்சிப்பாளையம் கிராமத்தில் உள்ள அந்த காலிமனைக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிஓடினார்கள். உஷாரான போலீசார் அவர்களை பிடிக்க விரைந்து சென்றபோது, ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் ஆனங்கூரை சேர்ந்த பாஸ்கர்(வயது 28) டிரைவர் என்பதும், லாரியில் மணலை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்ததோடு, பாஸ்கரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகிறார்கள்.


Next Story