வலுவான லோக்பால் அமைவதை எந்த கட்சியும் விரும்பவில்லை; நீதிபதி சந்தோஷ் ஹெக்டே பேட்டி


வலுவான லோக்பால் அமைவதை எந்த கட்சியும் விரும்பவில்லை; நீதிபதி சந்தோஷ் ஹெக்டே பேட்டி
x
தினத்தந்தி 31 July 2018 3:15 AM IST (Updated: 31 July 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

வலுவான லோக்பால் அமைவதை எந்த கட்சியும் விரும்பவில்லை என்றும், அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நான் பங்கேற்பேன் என்றும் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறினார்.

பெங்களூரு,

லோக்பால் அமைப்பை அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வருகிற அக்டோபர் மாதம் 2–ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து கர்நாடக லே£க்அயுக்தா முன்னாள் நீதிபதியும், அன்னா ஹசாரே குழுவில் உறுப்பினராக இடம் பெற்று இருப்பவருமான சந்தோஷ் ஹெக்டே ஐதராபாத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பை அமைக்க வலியுறுத்த சமூக ஆர்வலர் அன்னா ஹாசரே அக்டோபர் 2–ந் தேதி உண்ணாவிரதம் தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளார். அதில் நான் கலந்துகொள்வேன். எனக்கு வேறு சில ஒப்புக்கொண்ட வேலைகள் இருக்கின்றன. அதனால் முடிந்தால் அக்டோபர் 2–ந் தேதி அகமதுநகர் மாவட்டத்தில் ராலேகான் சித்தி கிராமத்தில் நடைபெறும் அன்னா ஹசாரே போராட்டத்தில் கலந்துகொள்வேன் அல்லது வேறு ஒரு நாளில் அதில் பங்கேற்பேன்.

இந்த போராட்டத்தில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துகொள்ள வேண்டும். லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. ஆனால் சில காரணங்களுக்காக லோக்பால் அமைப்பை இன்னும் உருவாக்கவில்லை. லோக்பால் நியமனம் குறித்து மத்திய அரசு ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் காங்கிரஸ் குழு தலைவர் பங்கேற்கவில்லை.

நியமன குழுவின் செயல்பாட்டை ஒரு நபர் நிறுத்திவைக்க முடியாது. மத்திய அரசு, லோக்பால் நியமனம் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். காங்கிரஸ் குழு தலைவர் பங்கேற்கவில்லை என்று காரணத்தை கூற முடியாது. கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் லே£க்அயுக்தா அமைப்பு பலவீனப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு, மேற்கு வங்காள மாநிலங்களிலும் இதே நிலை தான் உள்ளது. எந்த கட்சியும் வலுவான லோக்பால், லோக்அயுக்தா அமைப்புகள் அமைவதை விரும்பவில்லை.  இவ்வாறு சந்தோஷ் ஹெக்டே கூறினார்.


Next Story