மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி நாளை முதல் டாக்டர்கள் போராட்டம்
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி தமிழகத்தில் நாளை (புதன்கிழமை) முதல் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் செந்தில் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட அனைத்து மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் கோரிக்கை முழக்க ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. கூட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநில தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். அனைத்து மருத்துவர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் அருள், அமுதா கார்த்திகேயன், ரங்கசாமி, மகேஷ், ரங்கநாதன், ரகுகுமரன், ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் லட்சுமி நரசிம்மன், அரசு மருத்துவ அலுவலர் சங்க மாநில கூடுதல் செயலாளர் நந்தகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அனைத்து மருத்துவர்கள் சங்க மாநில கூட்டமைப்பின் தலைவர் செந்தில் பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவர்கள் சங்கங்களையும் இணைத்து, அனைத்து மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி உள்ளோம். தற்போது தமிழக அரசு மருத்துவர்கள் மத்திய அரசு மருத்துவர்களை விட அதிகப்படியான வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் கிடையாது.
தமிழக அரசு மருத்துவர்கள், மத்திய அரசு மருத்துவர்களை விட ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை குறைவான சம்பளம் பெறுகிறார்கள். அதுவும் மற்ற மாநிலங்களை விட குறைவான சம்பளம் பெறுகிறார்கள்.
பணிசுமை அதிகமான சூழ்நிலையில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் நாளை (புதன்கிழமை) முதல் 20-ந் தேதி வரை கோரிக்கை பட்டை அணியும் போராட்டம் நடைபெறும்.
ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி கோரிக்கை முழக்க போராட்டமும், 24-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்களை நோக்கி பேரணியும், 27-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 21-ந் தேதி வரை ஆய்வு கூட்டம் புறக்கணிப்பு , வகுப்பு எடுக்க மறுத்தல், இன்சூரன்ஸ் பணி புறக்கணிப்பு, முத்துலட்சுமி ரெட்டி உதவித்தொகை பணி புறக்கணிப்பு போன்ற ஒத்துழையாமை போராட்டம் நடைபெறும். இதை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 21 -ந் தேதி மாநிலம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும்
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 300 டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story