தண்ணீர் இல்லாததால் கருகிய நிலக்கடலை செடிகளை பாடையாக கட்டி வந்து அஞ்சலி செலுத்திய விவசாயிகள்
தண்ணீர் இல்லாததால் கருகிய நிலக்கடலை செடிகளை பாடையாக கட்டி வந்து குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் அஞ்சலி செலுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்தும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்தும் 400-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றார்.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் மீது எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டம் நடந்த நாளில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன் தலைமையிலான விவசாயிகள் கருகிய நிலக்கடலை (மணிலா) செடிகளை பாடைபோல் கட்டி தூக்கியவாறு ஊர்வலமாக வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் வரை வந்த அவர்கள் அதனை கீழே இறக்கி வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து புருஷோத்தமன் மற்றும் விவசாயிகள் சந்திரசேகர், சிவாக்குமார், சரவணன், அய்யாயிரம், துரைசாமி கூறுகையில், “ஜூன் மாதம் பெய்த மழையை தொடர்ந்து நிலத்தை உழவு செய்து ஏக்கருக்கு ரூ.4 ஆயிரத்து 500 செலவில் நிலக்கடலை பயிரிடப்பட்டது. 40 நாட்களான நிலையில் செடிகளில் பூக்கள் பூத்தன. அதன்பிறகு காய்பிடிக்க வேண்டிய தருணம் வருவதற்குள் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிவிட்டன.
இந்த பயிருக்கு ஏக்கருக்கு ரூ.450 வேளாண் காப்பீடு செய்து உள்ளோம். எனவே காப்பீடு நிவாரணம் பெற வேளாண்மை துறை மூலம் மகசூல் இழப்பீடு கணக்கிட வேண்டும். வேளாண்மை துறையும், புள்ளியியல் துறையும் இணைந்து பயிர் அறுவடை சோதனை செய்து இழப்பீடு வழங்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர்கள் குறைத்தீர்வு கூட்டத்திற்கு சென்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் விஜயராஜ் தலைமையில், மாநில செயலாளர் கொள்ளிடம் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகள் தாமரை குளத்தில் கரைக்கப்படும். இந்த குளம் திருவண்ணாமலை நகரத்தின் மையப் பகுதியில் உள்ளது. குளத்தை சுற்றி கடைகள் உள்ளதால் குளம், வெளியில் தெரியாத நிலையில் உள்ளது. இந்த குளத்தை சுத்தம் செய்து சுற்றிலும் படிக்கட்டுகள் மற்றும் பூங்கா அமைத்து, நகராட்சி மூலம் சுற்றுலா படகு சவாரி போன்ற பொழுது போக்கு அம்சங்கள் ஏற்படுத்த வேண்டும்.
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு மாவட்ட வாரியாக அரசு மானியத்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கிட வேண்டும். தமிழகத்தில் உள்ள ஆன்மிக சுற்றுலா தலம் செல்லும் பக்தர்களின் வாகனங்களுக்கு சுங்க வரிக் கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்து கோவில்களிலும் பக்தர்களுக்கு தரிசன கட்டணம் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story