புனேயில் காணாமல்போன ராணுவ வீரர் பிணமாக மீட்பு தமிழகத்தை சேர்ந்தவர்


புனேயில் காணாமல்போன ராணுவ வீரர் பிணமாக மீட்பு தமிழகத்தை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 31 July 2018 5:24 AM IST (Updated: 31 July 2018 5:24 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் காணாமல் போன ராணுவ வீரர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தமிழகத்தை சேர்ந்தவர்.

புனே,

புனே முன்ட்வாவில் உள்ள ராணுவ முகாமில் பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீரமேஷ்(வயது28). தமிழ்நாட்டை சேர்ந்த இவர், கடந்த 26-ந்தேதி திடீரென காணாமல் போய்விட்டார். இதுபற்றி முன்ட்வா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் புனே கோர்பாடி பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே அவர் பிணமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், முகாமில் அவர் தங்கியிருந்த அறையில் ஒரு கடிதம் சிக்கியது. அதில், ‘எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. நான் எனது தாய், தந்தையை சந்திக்க செல்கிறேன். எனது பணப்பலன்களை எனது 2 சகோதரர்கள் மற்றும் இரு சகோதரிகளுக்கு கொடுத்து விடுங்கள்’ என எழுதப்பட்டு இருந்தது.

இதன் மூலம் ஸ்ரீரமேஷ் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story