மெட்ரோ ரெயிலில் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் மும்பை பெருநகர வளர்ச்சி குழும கமிஷனர் தகவல்


மெட்ரோ ரெயிலில் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் மும்பை பெருநகர வளர்ச்சி குழும கமிஷனர் தகவல்
x
தினத்தந்தி 31 July 2018 5:30 AM IST (Updated: 31 July 2018 5:30 AM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என மும்பை பெருநகர வளர்ச்சி குழும கமிஷனர் ஆர்.ஏ.ராஜூவ் கூறினார்.

மும்பை,

மும்பையில் காட்கோபர்- வெர்சோவா இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயிலுக்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது தினமும் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் மெட்ரோ ரெயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது.

இதனால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் பயணிகளுக்கு நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் போய்விடுகிறது.

இது குறித்து மும்பை பெருநகர வளர்ச்சி குழும கமிஷனர் ஆர்.ஏ. ராஜூவ் கூறியதாவது:-

ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி மெட்ரோ ரெயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மும்பை மெட்ரோ ஒன் நிறுவனத்திடம் கூறியுள்ளோம். தற்போது 4 பெட்டிகளுடன் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்கள் 6 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மெட்ரோ ரெயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் போது, அதில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 4 லட்சத்தை தொடும் என போக்குவரத்து வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Next Story