தினம் ஒரு தகவல் : ஆன்-லைன் வர்த்தகம்


தினம் ஒரு தகவல் :  ஆன்-லைன் வர்த்தகம்
x
தினத்தந்தி 31 July 2018 9:04 AM IST (Updated: 31 July 2018 9:04 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 4 வருடங்களில் ஆன்-லைன் வர்த்தகம் வருடம் தோறும் 59 சதவீதம் வளர்ந்துள்ளது. மொத்த, சில்லரை வியாபாரத்தில் இது 1 சதவீதத்தைவிட குறைவுதான் என்றாலும், இதன் வளர்ச்சியும், முக்கியத்துவமும் பெருகி வருகிறது.

ஆன்-லைன் வர்த்தகம் மற்ற நாடுகளில்  வேகமாக வளர்வதை பார்க்க முடிகிறது. சீனாவில் ஆன்-லைன் வர்த்தகம் இந்தியாவைவிட 12 மடங்கு அதிகம்.

கூகுள் மற்றும் போர்ரெஸ்டர் கன்சல்ட்டிங் நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் அடுத்த 2 வருடத்தில் இந்தியாவின் இ-கமெர்ஸ் நிறுவனங்களின் வியாபாரம் 15 பில்லியன் டாலரை தொடும் என்று தெரிய வந்துள்ளது. இதில் 100 பில்லியன் வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் என்றும், அதில் 40 பில்லியன் பெண் வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் என்றும் இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. பெரு நகரங்களில் உள்ள நுகர்வோர் தற்சமயம் இதனை பெரிதும் பயன்படுத்தினாலும், சிறு நகரங்களுக்கும் ஆன்-லைன் வர்த்தகம் வேகமாக பரவி வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

பல ஆய்வுகளில், ஆன்-லைன் வர்த்தக வாடிக்கையாளர்கள் இந்த முறையில் உள்ள வசதிகளை நன்கு புரிந்து வைத்துள்ளதாக தெரிகிறது. பிரபலமான நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதும், விற்பனைக்கு பின் உள்ள சேவைகளை கவனித்து வாங்குவதும் பெருகி வருகிறது. பல நிறுவன பொருட்களின் தரத்தையும், விலைகளையும் ஒப்பிட்டு வாங்க ஆன்-லைன் வர்த்தகம் உதவுவதாக தெரிகிறது. பொருளை வீட்டிற்கே வந்து கொடுப்பது, பொருளை பெற்றவுடன் அதன் விலையை கொடுக்கலாம், குறைபாடுள்ள பொருளை மாற்றும் வசதி அல்லது பணத்தை திரும்ப பெரும் வசதி என பல அம்சங்கள் நுகர்வோரை ஆன்-லைன் வர்த்தகம் பக்கம் இழுக்கிறது.

மொபைல் போன் வழியாக வியாபாரம் செய்ய நுகர்வோரை ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்கள் தூண்டுகின்றன. இதில் எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும் பொருட்களை பெற முடியும் என்பதால் வியாபாரம் பெருகும் என்பது இந்நிறுவனங்களின் கணக்கு. குறிப்பாக மொபைல் போன் ஆன்-லைன் வர்த்தகம் மூலம் அதிகம் விற்பனையாகும் பொருள். பெண்கள் அழகு சாதனப் பொருட்களை வாங்குவதும் பெருகி வருகிறது. புத்தகங்கள், குறிப்பாக ஆங்கில புத்தகங்கள் மிக குறைந்த விலையில் வாங்க முடிகிறது.

இந்தியாவில் 50-க்கும் அதிகமான ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் மிகப்பிரபலமானவை பிளிப்கார்ட், அமேசான் மற்றும் சனப் டீல். இவை எல்லாமே அதிக அளவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கொண்டவை.

சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை இந்தியா அனுமதிக்காததால், இந்நிறுவனங்கள் சந்தை இடம் ஆன்-லைன் வர்த்தகம் நிறுவனங்களாக உள்ளன. இந்த ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்கள் நேரடியாக தங்கள் பொருட்களை விற்பதில்லை. மாறாக, இவை விற்பனையாளருக்கும், வாங்குபவருக்கும் ஓர் இணைப்பு பாலமாக உள்ளன. எனவே இவர்களின் இணையதளங்கள் ஒரு சந்தை இடத்தை போல் இருக்கின்றன.


Next Story