கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன?; உருக்கமான கடிதம் சிக்கியது
திருச்சியில் உள்ள கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி இருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.
திருச்சி,
திருச்சி அருகே ஒரு தனியார் கலை-அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் விடுதியில் திருச்சி மற்றும் பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட வெளிமாவட்ட மாணவ-மாணவிகள் பலர் தங்கி படித்து வருகிறார்கள். இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் மகள் தேன்மொழி(வயது 20) இந்த கல்லூரி விடுதியில் தங்கி, பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவி தேன்மொழிக்கு ஏற்கனவே, இதய பிரச்சினை இருந்தாக கூறப்படுகிறது. அதற்காக சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தாராம்.
இந்த நிலையில் நேற்று காலை கல்லூரி விடுதி அறையில் மாணவி தேன்மொழி மட்டும் தனியாக இருந்தார். அவருடன் அறையில் தங்கி இருந்த சக மாணவிகள் வெளியில் சென்று இருந்தனர். அந்த மாணவிகள் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தபோது தேன்மொழி, மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அதைப்பார்த்து சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு மாணவிகள் தகவல் தெரிவித்தனர். நிர்வாகம் தரப்பில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நெஞ்சுவலி காரணமாக மாணவி தேன்மொழி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே போலீசார், மாணவி தேன்மொழி தங்கி இருந்த அறையை சோதனை செய்தனர். அப்போது அவர் கைப்பட எழுதிவைத்த உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், “நான் இதய பிரச்சினையால் நெஞ்சுவலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தேன். என்னால், வலியை தாங்கி கொள்ளமுடியவில்லை., எனவே, இந்த துயரமான முடிவை எடுக்க முடிவெடுத்தேன். யாரும் வருத்தப்படாதீங்க. கோபப்படாதீங்க, எல்லோரும் என்னை மன்னிச்சிருங்க” என எழுதப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி மாணவ-மாணவிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே கல்லூரி நிர்வாகம் தரப்பில் நேற்று முதல் நாளை(வியாழக்கிழமை)வரை 3 நாட்களுக்கு கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Related Tags :
Next Story