தரமான சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


தரமான சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 1 Aug 2018 4:15 AM IST (Updated: 1 Aug 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே தரமான சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை ஊராட்சியில் புதுப்பட்டி விலக்கு சாலையில் இருந்து ஆத்தங்கரைவிடுதி வரை ரூ.27 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சாலை போடப்பட்டது. தற்போது இந்த சாலையில் ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது. நீண்ட நாட்களாக போராடி அரசிடம் இருந்து நிதி பெற்று புதிதாக போடப்பட்ட சாலை 4 நாட்களுக்கு பெயர்ந்துபோனதைக் கண்டு அப்பகுதி கிராம பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆத்தியடிப்பட்டி, கீழ.வாண்டான்விடுதி, மேல. வாண்டான்விடுதி ஆத்தங்கரைவிடுதி ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டி முக்கத்தில் அமர்ந்து சாலையை தரமாக அமைத்து தரக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் சதாசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 10 நாட்களுக்குள் புதிதாக போடப்பட்ட சாலையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து தரமாக போடப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story