நெரிசல் மிகுந்த பகுதியில் சிறுமியை மொபட் ஓட்ட வைத்த தந்தையின் லைசென்சு ரத்து
நெரிசல் மிகுந்த பகுதியில் சிறுமியை மொபட் ஓட்ட வைத்த தந்தையின் லைசென்சு ரத்து செய்யப்பட்டது.
பெரும்பாவூர்,
எர்ணாகுளம் மாவட்டம் இடப்பள்ளி லுலுபால் அருகே சாலையில் 5 வயது சிறுமி மொபட் ஓட்டிச் சென்றாள். இந்த மொபட்டில் அவளுடைய தந்தையும், தாயும் உடன் இருந்தனர். இதை செல்போனில் சிலர் படம் பிடித் தனர். இந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவியது. இதைப்பார்த்தும் மோட்டார் வாகன அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து பட்டாஞ்சேரி வட்டார போக்குவரத்து அதிகாரி ஷாஜிமாதவன் விசாரணை நடத்தினார். விசாரணையில் மொபட்டை ஓட்டிச் சென்றது பெரும்படப்பு பகுதியை சேர்ந்த சிபு பிரான்சிஸ் என்பவரின் 5 வயது மகள் என்பது தெரியவந்தது.
இதையொட்டி சிபு பிரான்சிஸ் குறித்து தலைமை வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. தலைமை வட்டார போக்குவரத்து அதிகாரியான ஜோதி பி.ஜோஸ் என்பவர் சிபு பிரான்சிஸ் ஓட்டுனர் உரிமத்தை (லைசென்சு) ஒரு ஆண்டுக்கு ரத்து செய்தார். மேலும் அவர் மீது போலீசிலும் புகார் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story