உழவர் சந்தை குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதி செய்ய வேண்டும், குன்னூர் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் மனு
உழவர் சந்தை குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதி செய்ய வேண்டும் என்று குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமுவிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
குன்னூர்,
குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் 8-வது வார்டு பகுதியில் உழவர் சந்தை அருகில் உள்ள காமராஜபுரம், ரெய்லி காம்பவுண்ட், மாடல் ஹவுஸ் போன்ற பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆனால் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. உழவர் சந்தை பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. அதன் பின் பூங்கா பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்டது. மேலும், அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து உள்ளன.
நகராட்சி நிர்வாகம் பூங்காவில் குப்பை தொட்டியை வைத்துள்ளது. ஆனால், இங்கு சரிவர குப்பைகள் அகற்றப்படுவது இல்லை. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. இதுமட்டுமின்றி உழவர் சந்தை பகுதியில் தெருவிளக்குகள் பழுதடைந்து உள்ளன. தெருவிளக்குகள் எரியாததால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் இரவில் நடமாட மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குன்னூர் தொகுதி எம்.எல்.ஏ. சாந்தி ராமு, குன்னூர் நகராட்சி கமிஷனர் சரஸ்வதி ஆகியோர் அப்பகுதியில் ஆய்விற்காக வந்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அடிப்படை வசதி கேட்டு நகராட்சி கமிஷனர் மற்றும் குன்னூர் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் சுகாதார வசதி, தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகளை அழைத்து செல்ல முடியவில்லை. எனவே எங்களுக்கு அடிப்படை வசதி செய்து தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் விரைவில் செய்து தரப்படும் என சாந்தி ராமு எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சி கமிஷனர் சரஸ்வதி ஆகியோர் உறுதி அளித்தனர்.
கோத்தகிரி ஊராட்சி நெடுகுளா ஊராட்சிக்குட்பட்ட குட்டிமணி நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தை குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா? என்று ஆய்வு செய்தார். இதனைதொடர்ந்து குட்டி மணி நகர் கிராம மக்கள், தங்களது கிராமத்திற்கு செல்லும் சாலையை தாங்களாகவே அமைத்து வரும் பணிகளை பார்வையிட்டதுடன் அரசிடமிருந்து நிதி பெற்று அந்த சாலையை தார் சாலையாக மாற்றி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related Tags :
Next Story