போலீஸ் சூப்பிரண்டு பதவி ஏற்பு
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொன்னி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சிபி சக்கரவர்த்தி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பொன்னி நேற்று முன்தினம் திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்கவும், சூதாட்டங்களை தடுக்கவும், குற்றச்சம்பவங்களை தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story