ஆவடியில், டாஸ்மாக் கடையை முன்கூட்டியே திறக்கக்கூறி விற்பனையாளரை பீர் பாட்டிலால் அடித்த 6 பேர் கைது


ஆவடியில், டாஸ்மாக் கடையை முன்கூட்டியே திறக்கக்கூறி விற்பனையாளரை பீர் பாட்டிலால் அடித்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 1 Aug 2018 4:45 AM IST (Updated: 1 Aug 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியில், டாஸ்மாக் கடையை முன்கூட்டியே திறக்கக்கூறி விற்பனையாளரை பீர் பாட்டிலால் அடித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆவடி,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கொடிவலசா கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 42). இவர் ஆவடி அடுத்த கோவில்பதாகை மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று காலை 11.55 மணிக்கு கடையை திறக்க வந்தார். அப்போது மது பாட்டில் வாங்குவதற்காக அங்கு வந்த கோவில்பதாகை பகுதியை சேர்ந்த செல்வம் என்ற பிளேடு செல்வம் (30) பூமணி (21) முருகன் (23) ராஜேஷ் (29) விநாயகமூர்த்தி (28) வேலு (35) ஆகிய 6 பேரும் நாராயணசாமியிடம் உடனே கடையை திறக்க சொல்லி உள்ளனர்.

அதற்கு நாராயணசாமி கடையை திறக்க இன்னும் 5 நிமிடம் இருக்கிறது. 12 மணி ஆனவுடன்தான் கடையை திறப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 6 பேரும் கடையை திறக்கச் சொல்லி அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து அவருடைய தலையில் சரமாரியாக அடித்து உள்ளனர்.

இதில் நாராயணசாமி மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவர் ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு, தலையில் 5 தையல் போடப்பட்டது. இதுகுறித்து நாராயணசாமி ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story