மாவட்ட பொறுப்பு மந்திரிகள் நியமனம் பரமேஸ்வர்–பெங்களூரு, ஜி.டி.தேவேகவுடா–மைசூரு


மாவட்ட பொறுப்பு மந்திரிகள் நியமனம் பரமேஸ்வர்–பெங்களூரு, ஜி.டி.தேவேகவுடா–மைசூரு
x
தினத்தந்தி 31 July 2018 11:30 PM GMT (Updated: 31 July 2018 11:05 PM GMT)

மாவட்ட பொறுப்பு மந்திரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். துணை முதல்–மந்திரி பரமேஸ்வருக்கு பெங்களூரு நகரமும், ஜி.டி.தேவேகவுடாவுக்கு மைசூருவும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

மாவட்ட பொறுப்பு மந்திரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். துணை முதல்–மந்திரி பரமேஸ்வருக்கு பெங்களூரு நகரமும், ஜி.டி.தேவேகவுடாவுக்கு மைசூருவும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சிவானந்தபட்டீல்–பாகல்கோட்டை

கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைத்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இந்த நிலையில் மாவட்ட பொறுப்பு மந்திரிகளை நியமித்து முதல்–மந்திரி குமாரசாமி நேற்று உத்தரவிட்டார். அதில் கூறி இருப்பதாவது:–

1. ஜி.பரமேஸ்வர்(துணை முதல்–மந்திரி) – பெங்களூரு நகரம், துமகூரு

2. ஆர்.வி.தேஷ்பாண்டே(வருவாய்த்துறை) – உத்தர கன்னடா, தார்வார்

3. டி.கே.சிவக்குமார்(மருத்துவ கல்வி, நீர்ப்பாசனம்) – ராமநகர், பல்லாரி

4. கே.ஜே.ஜார்ஜ்(தொழில்துறை) – சிக்கமகளூரு

5. ரமேஷ் ஜார்கிகோளி(நகரசபை நிர்வாகம், துறைமுகம்) – பெலகாவி

6. சிவானந்தபட்டீல்(சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்) – பாகல்கோட்டை

7. பிரியங்க் கார்கே(சமூக நலன்) – கலபுரகி

ஜெயமாலா–உடுப்பி

8. ராஜசேகர பட்டீல்(கனிமவளம், நில அறிவியல்) – யாதகிரி

9. வெங்கடரமணப்பா(தொழிலாளர் நலன்) – சித்ரதுர்கா

10. சிவசங்கரரெட்டி(விவசாயம்) – சிக்பள்ளாப்பூர்

11. கிருஷ்ண பைரேகவுடா(சட்டம், கிராமவளர்ச்சி, பஞ்சாயத்துராஜ்) – பெங்களூரு புறநகர், கோலார்

12. யு.டி.காதர்(நகர வளர்ச்சி, வீட்டுவசதி) – தட்சிண கன்னடா

13. புட்டரங்கஷெட்டி(பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் நலன்) – சாம்ராஜ்நகர்

14. ஜமீர்அகமதுகான்(உணவு, பொதுவிநியோகம்) – ஹாவேரி

15. ஜெயமாலா(பெண்கள், குழந்தைகள் நலன்) – உடுப்பி

பண்டப்பா காசம்பூர்–பீதர்

16. சங்கர்(வனம், சுற்றுச்சூழல்) – கொப்பல்

17. என்.மகேஷ்(பள்ளி கல்வி) – கதக்

18. வெங்கடராவ் நாடகவுடா(கால்நடை வளர்ச்சி, மீன்வளம்) – ராய்ச்சூர்

19. எஸ்.ஆர்.சீனிவாஸ்(சிறிய தொழில்கள்) – தாவணகெரே

20. சி.எஸ்.புட்டராஜூ(சிறிய நீர்ப்பாசனம்) – மண்டியா

21. சா.ரா.மகேஷ்(சுற்றுலா, பட்டுவளர்ச்சி) – குடகு

22. பண்டப்பா காசம்பூர்(கூட்டுறவு) – பீதர்

ஜி.டி.தேவேகவுடா–மைசூரு

23. எச்.டி.ரேவண்ணா(பொதுப்பணி) – ஹாசன்

24. டி.சி.தம்மண்ணா(போக்குவரத்து) – சிவமொக்கா

25. எம்.சி.மனகுலி(தோட்டக்கலை) – விஜயாப்புரா

26. ஜி.டி.தேவேகவுடா(உயர்கல்வி) – மைசூரு


Next Story