காஞ்சீபுரம் மாவட்டத்தில் உலக வங்கி ஆலோசனை குழுவினர் ஆய்வு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீர்நிலைகளை உலக வங்கி ஆலோசனை குழுவினர் ஆய்வு செய்தனர்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீர்நிலைகளில் உலக வங்கி மூலம் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள ஊத்துக்காடு ஏரியில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை திட்ட குழு தலைவர் விபு நாயர் ஐ.ஏ.எஸ்., உலக வங்கி ஆலோசகர் மல்கோத்ரா ராஜகோபால் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது காஞ்சீபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், மகேந்திரன், இளம் பொறியாளர் மார்க்கண்டன், உதவி பொறியாளர்கள் பாஸ்கரன், அம்பலவாணன், கிருஷ்ண பிரபு, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story