உத்திரமேரூர் அருகே விவசாயி அடித்துக்கொலை: தந்தை, மகன் கைது


உத்திரமேரூர் அருகே விவசாயி அடித்துக்கொலை: தந்தை, மகன் கைது
x
தினத்தந்தி 1 Aug 2018 6:15 AM IST (Updated: 1 Aug 2018 5:52 AM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம், 

உத்திரமேரூரை அடுத்த பெருநகர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 46). விவசாயி. நேற்று முன்தினம் இரவு அவர் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த நடராஜ் (55) என்பவர் குடிபோதையில் வந்தார். அவரிடம், முருகானந்தம் மது குடித்து வந்தது தொடர்பாக அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டார்கள். பின்னர் வீட்டுக்கு வந்த நடராஜ் தனது மகன் கண்ணனிடம்(25) இது குறித்து கூறினார்.

இதைத்தொடர்ந்து இருவரும் முருகானந்தம் வீட்டுக்கு சென்று ரகளையில் ஈடுபட்டனர். முருகானந்தத்தை வெளியே அழைத்து சரமாரியாக தாக்கினர்.

இதில் பலத்த காயம் அடைந்த முருகானந்தத்தை மானாமதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகானந்தம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து உத்திரமேரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து நடராஜ், அவரது மகன் கண்ணன் ஆகியோரை கைது செய்தார். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story