சென்னை கோட்டை எதிரே உள்ள பூங்காவில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம்
சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை,
தமிழக அரசு சார்பில், வருகிற 15-ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றி உரையாற்றுகிறார். சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள், புனித ஜார்ஜ் கோட்டைக்கு எதிர்புறம் உள்ள பூங்காவில் தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும், சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக தனித்தனி மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இரவு பகலாக இந்தப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தலைமைச் செயலக பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் விருதுகளுக்கான நபர்களையும் அரசு தேர்வு செய்து வருகிறது.
Related Tags :
Next Story