தஞ்சையில் மாவட்ட விளையாட்டு போட்டிகள் 561 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
தஞ்சையில் நடந்த மாவட்ட விளையாட்டு போட்டிகளில் 561 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தஞ்சை மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டிகளை கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் குணசேகரன் தொடங்கி வைத்தார்.
100 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தடகள போட்டியில் 110 வீரர்களும், 80 வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
கூடைப்பந்து போட்டியில் 8 ஆடவர் அணிகளும், 4 மகளிர் அணிகளும், கோ–கோ போட்டியில் 8 ஆடவர் அணிகளும், 6 மகளிர் அணிகளும், நீச்சல் போட்டியில் 35 வீரர்களும், 24 வீராங்கனைகளும் பங்கேற்றனர். போட்டிகளில் மொத்தம் 561 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
தடகள போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கும், குழு போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளுக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி மற்றும் மாவட்ட விளையாட்டு பிரிவு பயிற்றுனர்கள், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story