காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை
செய்யாறு அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரே மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
செய்யாறு,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா அரசங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 32), லாரி டிரைவர். இவரும், காஞ்சீபுரம் மாவட்டம், மேட்டுபாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகள் வினிதா (21) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெற்றோர்களுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து அவர்கள், வெம்பாக்கம் தாலுகா தாலி கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தினர். இந்த நிலையில் வினிதாவின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாலி கிராமத்திற்கு சென்று வினிதாவையும், பிரபுவையும் சந்தித்து உள்ளனர். அப்போது பிரபுவிடம் ஆடி மாதம் முடிந்த பிறகு ஊர் மக்கள் மற்றும் உறவினர்களை அழைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி வைக்கிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வினிதா வீட்டில் தூக்கில் தொங்குவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே வினிதா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி வினிதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் செய்யாறு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர், மகளின் உடலை கட்டிப்பிடித்து அழுதனர். இதுகுறித்து வினிதாவின் பெற்றோர் தூசி போலீசில் கொடுத்துள்ள புகாரில், எனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தற்கொலை செய்து கொண்ட வினிதாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story