மாவட்ட அளவிலான தடகள சாம்பியன் போட்டிகள் 11-ந் தேதி நடக்கிறது


மாவட்ட அளவிலான தடகள சாம்பியன் போட்டிகள் 11-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 2 Aug 2018 3:45 AM IST (Updated: 2 Aug 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 11-ந் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட அளவிலான தடகள சாம்பியன் போட்டிகள் நடைபெற உள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கத்தின் மாவட்ட தலைவரும், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவருமான மதியழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 11-ந் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட அளவிலான தடகள சாம்பியன் போட்டிகள் நடைபெற உள்ளது.

இதல் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள், 16, 18, 20 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் அவர்களுக்குரிய போட்டிகளில் பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த விளையாட்டு போட்டியில் தகுதி பெறுபவர்களை சென்னையில் இம்மாதம் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெறும் மாநில விளையாட்டு போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இதில் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவில் 29.9.1998 முதல் 30.9.2000-க்குள் பிறந்திருக்க வேண்டும். 16 வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவில் 29.9.2000 முதல் 30.9.2002-க்குள் பிறந்திருக்க வேண்டும். 18 வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவில் 29.9.2002 முதல் 30.9.2004-க்குள் பிறந்திருக்க வேண்டும். 20 வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவில் 29.9.2004 முதல் 30.9.2006-க்குள் பிறந்திருக்க வேண்டும்.

போட்டிகளில் பங்கு பெறும் மாணவ, மாணவிகள் போட்டி அன்றே பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story