பருவநிலை, வேளாண்மை குறித்த கையேடு-சுவரொட்டி அரியலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்


பருவநிலை, வேளாண்மை குறித்த கையேடு-சுவரொட்டி அரியலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 2 Aug 2018 4:15 AM IST (Updated: 2 Aug 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

நபார்டு வங்கியின் சார்பில், பருவநிலை மாற்றமும் வேளாண்மையும் என்ற தலைப்பில் கையேடுகளையும், சுவரொட்டிகளையும் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டார்.

அரியலூர்,

நபார்டு வங்கியின் சார்பில், பருவநிலை மாற்றமும் வேளாண்மையும் என்ற தலைப்பில் கையேடுகளையும், சுவரொட்டிகளையும் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டார். அப்போது கலெக்டர் விஜயலட்சுமி பேசுகையில், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி சென்னை இந்த வருடம் தமிழகத்திலுள்ள பத்து மாவட்டங்களில் பருவநிலை மாற்றம் பற்றிய கல்வியறிவு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் அடிப்படையில், அரியலூரில் பருவநிலை மாற்றமும் வேளாண்மையும் என்ற தலைப்பில் கையேடுகளும், சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பருவநிலை மாற்றத்தால் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை விவசாயிகள் எதிர்கொள்வது குறித்தும் அறிந்துகொள்ளலாம். விவசாயிகள் நீர்நிலை மேலாண்மையை கையாண்டால் பருவநிலை மாற்றத்தினை சிறப்பாக வேளாண் உற்பத்தி செய்ய முடியும் என்றார். இதில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகேஷ்வரி, நபார்டு வங்கி மேலாளர் நவீன்குமார், முன்னோடி வங்கி மேலாளர் இளஞ்சேரன் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story