நெல்லை மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்
நெல்லை மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியலை கலெக்டர் ஷில்பா அறிவித
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியலை கலெக்டர் ஷில்பா அறிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
அம்மா திட்ட முகாம்நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று ஒரு தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் தாலுகாவில் உள்ள அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி உடனே தீர்வு காணப்படும்.
இந்த முகாமில் பொதுமக்கள் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும், உழவர் பாதுகாப்பு அட்டை குறித்தும், நிலத்தாவாக்கள், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் மனு கொடுக்கலாம். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
குத்துக்கல்வலசைநெல்லை மாவட்டத்தில் இந்த மாவட்டத்திற்கான அம்மா திட்ட முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. நெல்லை தாலுகா நாரணம்மாள்புரம–2, பாளையங்கோட்டை தாலுகா மேலதிருவேங்கடநாதபுரம, சங்கரன்கோவில் தாலுகா வெள்ளப்பனேரி, தென்காசி தாலுகா குத்துக்கல்வலசை, செங்கோட்டை தாலுகா செங்கோட்டை டவுன், சிவகிரி தாலுகா தென்மலை–1, வீரகேரளம்புதூர் தாலுகா வீரகேரளம்புதூர் ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது.
ஆலங்குளம் தாலுகா பெத்தநாடார்பட்டி பகுதி–1, அம்பை தாலுகா சிவசைலம், நாங்குநேரி தாலுகா ஸ்ரீவரமங்கைபுரம், மருகால்குறிச்சி, ராதாபுரம் தாலுகா வடக்கு வள்ளியூர் பகுதி–1, கடையநல்லூர் தாலுகா கனகசபாபதிபேரி, திருவேங்கடம் தாலுகா தெற்குகுருவிகுளம், மானூர் தாலுகா கட்டாரங்குளம், சேரன்மாதேவி தாலுகா வடக்கு அரியநாயகிபுரம் பகுதி–1 ஆகிய ஊர்களில் அம்மா திட்டமுகாம் நடக்கிறது.
இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.