கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்தில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு
கொடுங்கையூரில் மூன்றாம் நிலை நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை,
கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் எதிர்மறை சவ்வூடு பரவுதல் மூலம் மூன்றாம் நிலை நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையங்களை சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய நிர்வாக இயக்குனர் ஜி.பிரகாஷ் ஆய்வு செய்தார்.
அப்போது செயல் இயக்குனர் டி.பிரபுசங்கர், கண்காணிப்பு பொறியாளர் ஏ.மலைச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் மாதம் நிறைவடைய உள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு தலா 45 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யலாம். மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டும் இன்றி இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் மற்றும் கழிவுநீர் ஆகியவற்றையும் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப தொழிற்சாலைகள் பயன்படுத்தலாம். மின்சார கட்டணம், அதிக முதலீடு மற்றும் பராமரிப்பு செலவு ஆகியவற்றின் காரணமாகவே மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீருக்கு விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கு சுத்திகரிக்கப்படும் தண்ணீர் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், சென்னை உர நிறுவனம் மற்றும் மணலி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story