திருவள்ளூர் அருகே வாலிபரை தாக்கியவர் கைது


திருவள்ளூர் அருகே வாலிபரை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2018 3:50 AM IST (Updated: 2 Aug 2018 3:50 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வீரராகவபுரத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் அஜித்குமார்(வயது 20). இவர் பாலிடெக்னிக் முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அஜித்குமார் தனது மோட்டார் சைக்கிளில் உறவினர்களுடன் செவ்வாப்பேட்டைக்கு சென்றார். அங்கு அவர் தனது உறவினரை இறக்கி விட்டு மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அவர் வீரராகவபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த பசுபதி(23), அவரது நண்பர் வினோத் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தையால் பேசி கையாலும், உருட்டுக்கட்டையாலும் தாக்கிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

கைது

இதில் காயம் அடைந்த அஜித்குமார் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள வினோத்தை தேடி வருகின்றனர். 

Next Story