அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு


அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு
x
தினத்தந்தி 2 Aug 2018 3:51 AM IST (Updated: 2 Aug 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

திருவோத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு மாணவர்களிடம் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. கலந்துரையாடல் நடந்தது.

செய்யாறு,

செய்யாறு டவுன் திருவோத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக பி.செந்தில்குமார், செயலாளராக பள்ளித் தலைமைஆசிரியர் என்.கன்னியப்பன், பொருளாளராக டி.பி.திருச்சிற்றம்பலம் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளியில் செயல்படும் புரவலர் திட்டத்தில் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ரூ.5 ஆயிரம் செலுத்தி இணைந்தார். அதே போல அ.தி.மு.க நிர்வாகிகள் எம்.மகேந்திரன், எஸ்.திருமூலன், ராஜமாணிக்கம் உள்ளிட்ட 9 பேர் இதே திட்டத்தில் இணைந்தனர்.

இதனை தொடர்ந்து வகுப்பறைக்குள் நுழைந்த தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. மாணவர்களிடம் பொது அறிவு தொடர்பாக கேள்விகளை கேட்டார். அப்போது அவர் பேசுகையில், “மாணவர்களாகிய நீங்கள் பள்ளியில் கவனமும், ஆர்வமும் செலுத்தி கல்வி பயில வேண்டும். கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். பெற்றோர்களை பேணிக்காத்திட வேண்டும்” என்றார். பின்னர் பள்ளி வளாகத்தை அவர் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், பள்ளி வளர்ச்சிக்கு தேவையானதை தெரிவித்தால் செய்து தருகிறேன். பள்ளி சுவர்களுக்கு வர்ணம் பூசிட பணியை மேற்கொள்ளுங்கள் அதற்கான தொகையை தருகிறேன்” என தலைமைஆசிரியரிடம் கூறினார்.

Next Story