சாரம் சரிந்து விழுந்த விபத்தில் சிகிச்சை பலனின்றி தொழிலாளி சாவு
சென்னை போரூரில் சாரம் சரிந்து விழுந்த விபத்தில் சிகிச்சை பலனின்றி தொழிலாளி இறந்தார்.
பூந்தமல்லி,
சென்னை போரூர் ராமச்சந்திரன் நகர், 5-வது தெருவில் புதிதாக தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதில் வெளிப்புற சுவர்களில் சிமெண்டு பூசுவதற்காக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளர்களான ராமாராவ்(வயது 28), சிம்மாசனம் (42) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் அதிகாலை சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக சாரம் சரிந்து விழுந்ததில் 5-வது மாடியில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலன்இன்றி சிம்மாசனம் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். ராமாராவ் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். இதுபற்றி போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story