மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
மீஞ்சூர் அருகே கரையான்மேடு பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர்,
மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கரையான் மேடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கரையான் மேடு பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
மழை காலங்களில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மறியல்
இதனால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கரையான்மேடு-அத்திபட்டு ரெயில்வே சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சாலை ஓரம் கிடந்த மின் கம்பத்தை சாலையின் குறுக்கே போட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த மீஞ்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார், மீஞ்சூர் ஒன்றிய ஆணையாளர் வேதநாயகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு, அத்திபட்டு ஊராட்சி செயலாளர் பொற்கொடி ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலையை ஒரு மாதத்தில் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story