கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு: அதிர்ச்சியில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சாவு


கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு: அதிர்ச்சியில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சாவு
x
தினத்தந்தி 2 Aug 2018 4:43 AM IST (Updated: 2 Aug 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அதிர்ச்சியில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் உயிரிழந்தார்.

விருத்தாசலம்,


தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கருணாநிதியின் உடல் நலம் பற்றி கவலையடைந்து தி.மு.க. தொண்டர்கள் சிலர் அதிர்ச்சியில் உயிரிழப்பதும், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. முன்னாள் நகரசபை கவுன்சிலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

விருத்தாசலம் பூதாமூரை சேர்ந்தவர் சங்கர்(வயது 95). நகரசபை முன்னாள் தி.மு.க கவுன்சிலர் ஆவார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காருணாநிதியின் உடல்நிலை பாதிப்பு குறித்து பரவிய தகவலை கேட்டதும், அதிர்ச்சியில் சங்கர் மயங்கி விழுந்தார். உடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனளிக்காமல் சங்கர் உயிரிழந்தார். சங்கருக்கு ருக்மணி(75) என்கிற மனைவியும், மகன்கள் நல்லமுத்து, அல்லிமுத்து, ஆறுமுகம், இளையபெருமாள் ஆகியோர் உள்ளனர்.

இதற்கிடையே சங்கர் இறந்தது பற்றி அறிந்த விருத்தாசலம் நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் தி.மு.க. வினர் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அப்போது அவருடன் இளைஞரணி குமார், முருகன், ஜெகதீசன், பாலு ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story