மராட்டியத்தில் கட்சியை பலப்படுத்தும் விதமாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் 6 நாட்கள் சுற்றுப்பயணம்


மராட்டியத்தில் கட்சியை பலப்படுத்தும் விதமாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் 6 நாட்கள் சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 2 Aug 2018 5:33 AM IST (Updated: 2 Aug 2018 5:33 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் காங்கிரசை பலப்படுத்தும் வகையில் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் 3 பேர் 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்கள்.

மும்பை. 

மராட்டியத்தில் காங்கிரசை பலப்படுத்தும் வகையில் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் 3 பேர் 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். இவர்கள் மாவட்ட கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலிட பொறுப்பாளர்கள்

2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற மற்றும் மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் காங்கிரஸ் கட்சி மும்முரமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே தொகுதி பங்கீடு குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும் ஒத்த கருத்துடைய கட்சிகளுக்கு கூட்டணியில் சேர அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில் மராட்டிய மாநிலத்துக்கான மேலிட பொறுப்பாளர்களாக தெலுங்கானாவை சேர்ந்த சம்பத் குமார், குஜராத்தை சேர்ந்த சோனல் பட்டீல், அரியானாவை சேர்ந்த ஆஷிஸ் துவா ஆகியோரை கட்சி நியமித்தது.

சுற்றுப்பயணம்

மேலிட பொறுப்பாளர்களான அவர்கள் 3 பேரும் 6 நாள் சுற்றுப்பயணமாக மராட்டியம் வந்துள்ளனர். இவர்கள் மராட்டியத்தில் காங்கிரசை பலப்படுத்தும் விதமாக கட்சியின் மாவட்ட தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இவர்கள் ஏற்கனவே ரத்னகிரி, ராய்காட், சிந்துதுர்க் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகளை மத்திய மும்பையில் உள்ள கட்சியின் தலைமையகம் திலக் பவனில் சந்தித்து ஆலோச னைநடத்தினர். இதேபோல் நேற்று மிரா-பயந்தர், வசாய்- விரார், தானே நகர், பிவண்டி மற்றும் உஸ்மனாபாத் ஆகிய மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினர்.

வரும் 4 நாட்களில் அவர்கள் வடக்கு மராட்டியம், மரத்வாடா மற்றும் விதர்பா மண்டலத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளனர்.

Next Story